கோவை பச்சாபாளையத்தில் உள்ள தன்னாட்சி நிறுவனமாகிய ஸ்ரீஇராம கிருஷ்ணா தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் அறிவியல் கழக துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிட். மூத்த பொது மேலாளர், சந்தைப்படுத்துதல் (தானியங்கி) பி.விஜய் பேசும்போது, வேகமாக வளர்ந்து வரும் நவீன அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு மாணவ, மாணவிகள் தங்களைத் தயார் செய்து கொள்ள கொண்டும். வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொண்டு நல்ல குடிமக்களாகச் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.
கல்லூரி முதல்வர் முனைவர். மு. பால்ராஜ் தலைமை தாங்கி பேசினார்.
அறிவியல் மற்றும் மனித நேயத் துறைத் தலைவர் முனைவர் ச.நாகராணி வரவேற்றார்.அறிவியல் கழகத் தலைவர், இயற்பியல் துறை முனைவர் வி.சித்ரா நன்றி கூறினார்.



