fbpx
Homeபிற செய்திகள்எதிர்காலத்திற்கான உத்தரவாதத்திற்கு ஐசிஐசிஐ ப்ரூ கியாரண்டிட் இன்கம் திட்டம்

எதிர்காலத்திற்கான உத்தரவாதத்திற்கு ஐசிஐசிஐ ப்ரூ கியாரண்டிட் இன்கம் திட்டம்

ஐசிஐசிஐ ப்ரூ டென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்(ICICI Prudential Life Insurance) நிறுவனம், ஐசிஐசிஐ ப்ரூ எதிர்காலத்திற்கான உத்தரவாதமான வருமானம்(ICICI Pru Guaranteed Income for Tomorrow) (நீண்ட காலத்திற்கானது) எனும் ஒரு புதிய பங்கேற்பு அற்ற சேமிப்புத் திட்டத்தை[non-participating savings product] அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டமானது உத்தரவாதமான வரிகளற்ற வருமானத்தை (guaranteed tax-free‘Income’) சீராகப் பெறுவது அல்லது வருமானத்துடன் 110% பிரீமியத்தை திரும்பப் பெறுவது (Income with 110% Return of Premium) என்று இருவாய்ப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தேதியைக் குறித்துக் கொள்ளுங்கள்(Save the Date) எனும் சேவ்திடேட் அம்சமானது ஒரு குறிப்பிட்ட தேதியில் வருமானத்தைப் பெறுவதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களது திருமணநாள், மனைவியின் பிறந்ததினம் உள்ளிட்ட சிறப்பு நாட்களன்று வருமானம் பெறுவதைத் தொடங்க முடியும். இது, குறிப்பிட்ட முக் கியத்துவமுள்ள நாட்களன்று வருமானம் பெற உதவுகிறது.

இதுபற்றி ஐசிஐசிஐ ப்ரூ டென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸின் தலைமை விநியோக அலுவலர் அமித்பால்தா கூறியதாவது: நோய்த் தொற்றுக்குப்பிறகான உலகில் நிதித்திட்டமிடல் கூடுதல் முக் þகியத்துவத்தைப் பெற்றுள்ளதால், எதிர்கால வருமானத்திற்கான உத்தர வாதத்தை அல்லது நிலையான வரு þமானத்திற்கான மாற்று வழியை தனி நபர்கள் முயற்சிக்கின்றனர்.

இந்த தேவையை அடையாளம் காணும் வகையில், ஐசிஐசிஐ ப்ரூ கியாரண்டிட் இன்கம் ஃபார்டுமாரோவை, நாங்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

வாடிக் கையாளர்கள் தாங்கள் பெறும் வரு மானத்தைச் சரியாக அறிந்து கொள்வதால், இது ஒரு வலுவான நிதி சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

புது யுகத்தின் டிஜிட்டல் மயமாக்கல் மூலமான தீர்வுகளுடன் எங்களது வாடிக்கையாளரை மையப்படுத்திய அணுகுமுறை இணைந் திருப்பதால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான, காகிதமற்ற மெய்நிகர் முறையில் இத்திட்டத்தில் சேரும் அனுபவத்தை வழங்குகிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img