திருச்சி அன்னை தொண்டு நிறுவனத் தின் 24வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியுடன் இணைந்து பஞ்சபூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் கோரையாறு கரையோரத்தை ஒட்டி 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம், இளநிலை பொறி யாளர் வேல்முருகன், 62வது வார்டு கவுன்சிலர் சுபா, அன்னை தொண்டு, நிறுவனம் நிறுவனர் ஞானசேகர், செயல் இயக்குனர் மேகலா ஆகியோர் முன்னி லையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
விழாவில் அன்னை நிறுவனத்தின் மகளிர் சுய உதவி குழுக்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள். மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அன்னை தொண்டு நிறுவனம் இந்தியாவில் 7 மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களிலும் இது போன்ற சமூக சேவைப் பணிகளைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



