fbpx
Homeபிற செய்திகள்ஐரோப்பிய பாத் லவுஞ்ச்களின் புதிய தொகுப்புடன் ஹிண்ட்வேரின் ‘க்யுவோ’

ஐரோப்பிய பாத் லவுஞ்ச்களின் புதிய தொகுப்புடன் ஹிண்ட்வேரின் ‘க்யுவோ’

ஹிண்ட்வேர் லிமிடெட் குழுமத்தின் முன்னணி லக்ஸுரி குளியலறை பிராண் டான க்யுவோ (Queo), லக்ஸுரி ஃபாசெட்கள் மற்றும் சானிட்டரிவேர் களின் புதிய கலெக்‌ஷனை அறிமுகம் செய்துள்ளது.

இப்புதிய அணிவரிசையில் ‘ஃபோர்ஸா’ (Forza) என அழைக்கப்படும் அழகான வடிவமைப்பிலான ஃபாசெட் களின் முழுமையான தொகுப்பு இடம் பெற்றிருக்கிறது.

ஹிண்ட்வேர் லிமிடெட் வழங்கும் ‘க்யுவோ’, ஆடம்பரம் மற்றும் சொகுசு என்பதனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் அணி வரிசையிலுள்ள ஒவ்வொரு தயாரிப்பும் சொகுசு வசதியின் சவுகரியத்தை பிரதிபலிக்கிறது.

தற்காலத்திய நவீன வடிவமைப்புகள் மற்றும் தனித்துவமான செயல்திறனின் விரிவான தொகுப்பை இந்த பிராண்ட் வழங்குவதால் இவற்றை உபயோகிக்கும்போது புத்துணர்ச்சி அனுபவத்தை நுகர்வோர் பெற வகை செய்கிறது.

ப்ரீமியம் மற்றும் மினிமலிஸ்டிக் வடிவமைப்புக்கு பெயர்பெற்ற ஐரோப்பிய பாத் லவுஞ்ச்களை இதன் புதிய பாத்ரூம் கலெக்‌ஷன் கொண்டிருக்கிறது.
எந்தவொரு குளியலறையின் தோற்றத் தையும் உடனடியாகவே பன்மடங்கு மேம்படுத்திக் காட்டுகின்ற அழகான வண்ணங்களில் இதன் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கண்களைஈர்க்கும் வகையிலும் மற்றும் நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய உறுதித்தன்மையோடும் இந்த கலெக்‌ஷன் வடிவமைக்கப்பட்டிருக் கிறது.

ஹிண்ட்வேர் லிமிடெட்-ன் பாத் டைல்ஸ் டிவிஷனின் தலைமை செயலாக்க அதிகாரி சுதான்ஷு போக்ரியால் கூறியதாவது: சானிட்டரிவேர் மற்றும் ஃபாசெட்ஸ் துறைகளில் முதன்மை நிறுவனமாகத் திகழும் நாங்கள், புதிய போக்குகள் மற்றும் அனுபவங்களை நிறுவுவதில் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறோம் என்றார்.

புதிய சிகரங்களை எட்டுவதை நோக்கி இந்நிறுவனம் முன்னேறி வருகின்ற நிலையில் புதிய எதிர்காலத்திற்காக நுகர்வோர்களுடன் ஆழமான பிணைப்பை உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தைத் தரும் வகையில் சானிட்டரிவேர் மற்றும் பாத் ஃபிட்டிங்குகள் அழகியல் உணர்ச்சியோடு மிகநேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட் டிருக்கிற 85 ஸ்டோர்களை ‘க்யுவோ’ கொண்டிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img