fbpx
Homeதலையங்கம்சாலை விபத்தில் 1 லட்சம் பேர் உயிரிழப்பு

சாலை விபத்தில் 1 லட்சம் பேர் உயிரிழப்பு

கடந்த ஆண்டில் சாலை விபத்தில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேர் மரணமடைந்ததாக இந்திய புள்ளி விவரங்களில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு புள்ளிவிவரம் 12 சதவீதம் குறைந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் தான் சாலை விபத்துக்களில் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்தில் இம்மாநிலத்தில் 23,121 பேர் மரணமடைந்துள்ளனர்.

அடுத்ததாக மத்திய பிரதேசத்தில் அதிகளவில் மரணம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவதாக கர்நாடகம் உள்ளது.

கடந்த ஆண்டு மோதிவிட்டு தப்பியதாக 45, 229 வழக்குகள் உள்ளது. இதுமொத்த விபத்தில் 43 சதவீதமாகும். 2019ம் ஆண்டு 52,540 பேர் மரணமடைந்துள்ளனர்.

சாலை விபத்து தொடர்பாக கடந்த ஆண்டில் மட்டும் 2020 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img