கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகளில் சன்ன ரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை இன்று தொடங்கியது. கோயம்புத்தூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.அழகிரி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தி.தனப்பிரியா, பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் வை.சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் 13 கூட்டுறவு அங்காடிகள், 2 அமுதம் அங்காடிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக 60 டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் 5 கிலோ வழங்கப்படும். அத்தியாவசியப் பொருட்கள் விநியோகக் குறைகள் குறித்து 7338720333 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.



