கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் இனிமேல் சரக்கு கிடைக்கும் என்ற அற்புதமான உத்தரவை போட்டுள்ளார் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. பாராட்டுக்கள்.
நீலகிரி மாவட்டத்தில் 75 மது கடைகள் செயல்படுகின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மது வாங்க வருவோர் கண்டிப்பாக முதல் தவணை கொரோனா தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும்.
அதற்கான எஸ்.எம்.எஸ் தகவல் அல்லது சான்று காட்டி மது பாட்டில்களை வாங்கி செல்லலாம்.
மதுக்கடை ஊழியர்களுக்கு நிர்வாகம் தரப்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
மது கடைகளில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைக்கு மது வாங்க வருவோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மற்ற மாவட்டங்களில் அந்தந்த கலெக்டர் பிறப்பிக்கும் உத்தரவை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு தடுப்பூசியை அலட்சியப்படுத்தும் குடிமகன்களுக்கு சரியான சூடு. மற்ற மாவட்டங்களிலும் இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் நல்லது.



