fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையத்தில் மீண்டும் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் மீண்டும் வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு

கோவை மாவட்டம் மேட் டுப்பாளையத்தில் மீண்டும் யானைகள் முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்து இந்து சமய அறநி லையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஆதீனங்க ளுக்கு சொந்தமான கோயில் யானைக ளுக்கு ஜெயலலிதா ஆட்சியில் கடந்த 2012-ம் ஆண்டு முதல்2021 ஆண்டு வரை தொடர்ந்து பத்து ஆண்டுகள் புத்துணர்வு முகாம் நடைபெற்றது.

48 நாட்கள் நடைபெற்ற புத்துணர்வு முகாமில் கலந்து கொள் ளும் கோவில் யானைகளுக்கு பசுந்தீ வனங்கள், சத்து மாத்திரைகள், சரி விகித சமச்சீர் உணவுகள் பயறு வகைகள், தினந்தோறும் பவானி ஆற்றில் ஷவர் குளியல் நடை பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் யானைகளுக்கு கால்நடை மருத்து வர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டு வந்தது.

இந்த முகாமில் கலந்து கொள் ளும் யானைகள் முகாம் முடிவில் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருப் பதாக பாகன்கள் கூறினர். இந்நிலை யில் அடுத்து வந்த திமுக ஆட்சியில் யானைகள் புத்துணர்வு முகாம் நடத் தப்படவில்லை இது குறித்து யானை ஆர்வலர்கள் அரசிடம் மீண்டும் முகாம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்த பொழுது கோவில் யானைகளுக்கு கோவில்களிலேயே நீச்சல் குளம், தொடர் மருத்துவ கண்காணிப்பு, உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக் கப்பட்டு விட்டதால் தனியாக முகாம் நடத்த வேண்டாம் என்று திமுக அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலை யில் தற்போதைய த.வெ.க ஆட்சியில் மீண்டும் யானைகள் புத்துணர்வு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.

அதற்கான முன்னேற்பாடு பணிகளை இன்று இந்து சமய அறநி லையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் முகாம் நடைபெறும் தேக்கம்பட்டி பவானி ஆற்றங் கரையோர பகுதியில் முகாம் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, முகாமில் யானைகள் கட்டி வைக்கப்படும் இடங்கள்,பாகன்கள் தங்கும் அறை, உணவு கூடம், தீவ னங்கள் வைக்கும் இடம், பவானி ஆற்றில் யானைகள் குளிப்பதற்கான இடங்கள், யானை நடை பயிற்சி செல்லும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், வனத்துறையினர் உதவியுடன் வனவிலங்குகள் யானை முகாமிற்குள் நுழையாதபடி சோலார் மின்வேலி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்தனர்.முதுமலை தெப்பக்காட்டில் இருமுறையும், தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் 11 முறையும் என மொத்தமாக 13 முறை யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img