fbpx
Homeபிற செய்திகள்10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு

10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கப்பரிசு

சின்னத்தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி களில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வித் திறன் ஊக்கப்பரிசு வழங் கும் விழா நேற்று (செப்.5) நடந்தது.

விகேவி குழுமத்தின் தலைவரும், ஊராட்சியின் முன்னாள் தலைவருமான விகேவி. சுந்தரராஜன், ஆண்டுதோறும் இந்த ஊராட்சிக்கு உள்பட்ட இராமநாதபுரம், சோமையனூர், உஜ்ஜயனூர், பாப்பநாயக் கன்பாளையம், நஞ்சுண்டாபுரம், வரப்பாளையம் ஆகிய கிரா மங்களில் பொதுத் தேர்வுகளில் வெற்றிபெறும் அனைத்து, மாணவ, மாணவிகளுக்கும் இது போன்று ஊக்கப்பரிசுகளை வழங்கிவருகிறார்.

15-வது ஆண்டாக சோமையனூரில் அவரது இல்லத்தில் நடந்த விழாவிற்கு ஊராட்சி மன்றத்தின் தலைவர் கார்த்திகேஸ்வரி சுந்தரராஜன் முன்னிலை வகித் தார்.

முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் விகேவி. சுந்தரராஜன் தலைமை வகித்தார். விகேவி குழும த்தின் நிர்வாக இயக்குநர் வினிஸ் வரவேற்றார்.

விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை தலைவர் ஓ.ஆறுமுகசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 350 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.ஆயிரம் ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

கோவை மனவள க்கலை மன்றத்தின் தலைவர் வெள்ளிங்கிரி, தம்பு தயாரிப்பு நிறுவன த்தின் தலைவர் பி.எஸ். தம்பு ஆகியோர் பாராட்டிப் பேசினர்.

நஞ்சுண்டாபுரம் ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் திருநாவுக் கரசு, ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கே.ஆர்.தங்கவேல் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை விகேவி குழுமத்தின் மேலாளர் சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img