Homeதலையங்கம்சபாஷ் டிஜிபி

சபாஷ் டிஜிபி

தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஒரே இரவில் 870 ரவுடிகள் பிடிபட்டனர். அவர்களில் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து நடந்த 52 மணி நேர வேட்டையில் 21,592 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மொத்தம் 3,325 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடுமையான எச்சரிக்கைக்கு பின் 2,526 பேரிடம் உறுதிமொழி பத்திரம் பெறப்பட்டுள்ளது. சிக்கிய ரவுடிகளிடம் இருந்து கத்தி, அரிவாள் மற்றும் துப்பாக்கிகள் என 1100 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைதூக்கும் கொலை குற்றங்களை குறைக்க இந்த அதிரடி நடவடிக்கையை டிஜிபி எடுத்துள்ளார்.

டிஜிபியின் அதிரடி நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். தமிழகத்தில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். இதில் 6000 ரவுடிகளுடன் சென்னை முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

தமிழகத்தில் ரவுடிகளின் அட்டூழியம் மீண்டும் தலைதூக்கி உள்ளதால் ஒழிப்பு நடவடிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு முடுக்கியுள்ளார்.

அவரது உத்தரவின்படி மாநிலம் முழுவதும் போலீசார் விடிய விடிய ரவுடிகளின் வீடு, பதுங்கி இருக்கும் இடங்கள், கள்ளகாதலியின் வீடுகள் என பல இடங்களில் அதிரடியாக புகுந்து வளைத்தனர்.

தமிழகத்தில் சட்டம்&ஒழுங்கை பாதுகாப்பதில் டிஜிபி சைலேந்திரபாபு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளை மீண்டும்பாராட்டுகிறோம். சபாஷ் டிஜிபி.

படிக்க வேண்டும்

spot_img