Homeபிற செய்திகள்கோவையில் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை அமைச்சர் சம்பத் குமார் துவக்கி வைத்தார்

கோவையில் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை அமைச்சர் சம்பத் குமார் துவக்கி வைத்தார்

கோவை வ உ சி பகுதியில் கோ ஆப்டெக்ஸில் தீபாவளி தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் துவக்கி வைத்தார். இங்கு தீபாவளி பண்டிகை வரை 30 சதவிகிதம் தள்ளுபடியில் விற்பனை நடைபெறுகிறது. 

விற்பனைக்கு துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு ஆடைகளை பார்வையிட்டு அதன் தரம் குறித்தும் விலை குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் ரவி தேஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டரி அளித்த அமைச்சர் சம்பத்குமார், அனைத்து மக்களும் எதிர்பார்த்த குறிப்பாக பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய கோ ஆப்டெக்ஸ் தள்ளுபடி விற்பனை இன்று துவங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மூன்று மாதங்களுக்கு 30% தள்ளுபடியுடன் விற்பனை நடைபெற உள்ளது என்றும் காஞ்சிபுரம் கோவை சேலம் ஆரணி ஆகிய பல்வேறு பட்டு சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். ஆடைகள் மட்டுமின்றி படுக்கை விரிப்புகள் ஆகியவையும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆண்டு கோவை மண்டலத்தில் 10 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.  மேலும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் இங்கு உள்ளதாக குறிப்பிட்டார். 

கோவையில் தோண்டப்பட்ட சாலைகள் முழுமையாக மூடப்படாதது குறித்தான கேள்விக்கு அது குறித்து டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் காலதாமதம் ஆகக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும் மக்கள் பயணிக்க கூடிய சாலையில் தான் நானும் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்னுடைய தொகுதிக்கு உட்பட்ட இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது எனவே அவசரகால ஆலோசனைகளை பற்றி மாநகராட்சி ஆணையாளரிடம் பேசிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

அவிநாசி சாலை மேம்பாலம் ஏறும் இடம் இறங்கும் இடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் தொடர்பான கேள்விக்கு விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்தவுடன் இது குறித்தான ஆய்வு கூட்டம் போடப்படும் என்றும் அங்கு மட்டும் இல்லாமல் கோவில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகி கொண்டு இருக்கிறது எனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்தவுடன் போக்குவரத்து நெரிசல் கட்டுப்பாடு தொடர்பாக ஆய்வு கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்வரை  நடிகர் விஜய் சேதுபதி விமர்சிக்கும் வண்ணம் நடந்து கொண்டது தொடர்பான கேள்விக்கு அது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி எனவே அதனை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவே பார்க்கலாம் என்பது என்னுடைய பார்வை எனவே அந்த விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்தார். அவர் அந்த பிக் பாஸ் வீட்டில் இருப்பதை தான் கூறுவதைப் போல தெரிகிறது முதல்வரைப் பொறுத்தவரை அவருடைய பணிகளை செவ்வனே செய்து வருகிறார் மக்களுக்கு உண்டான ஆட்சியை நடத்துபவர் நம்முடைய முதல்வர் என்று தெரிவித்தார்.

முதல்வர் லண்டனில் இருந்து திரும்பியவுடன் முதலீடுகள் குறித்தான முழு விவரங்கள் தெரியவரும் என்று தெரிவித்தார். 

திமுக கூட்டங்களில் முதல்வரை விமர்சித்து பேசுவது தொடர்பான கேள்விக்கு விமர்சனம் என்கின்ற பெயரில் அவதூறு பேசுவது தனிமனித தாக்குதல் நடத்துவது என்பது பழைய ஆட்சியில் இருப்பவர்கள் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு உண்டான பதிலை மக்கள் ஏற்கனவே கொடுத்து விட்டார்கள் எனவே அதன் பின் விளைவுகளையும் அவர்கள் தான் பார்க்கப் போகிறார்கள் என்று கூறிய அவர் எங்களுடைய பணி மக்கள் சேவைகளை செய்வதுதான் அதனை எங்களுடைய அரசு செய்யும் என்று தெரிவித்தார். மேலும் அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை எங்களுடைய பொறுப்புகள் அதிகமாக உள்ளது என்று கூறினார். 

எங்களுடைய நோக்கம் என்பது அடுத்த தேர்தலை பற்றி அல்ல அடுத்த தலைமுறை பற்றி எதிர்காலம் பற்றி தான் என்று கூறினார். எனவே இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல வரக்கூடிய காலங்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் காலங்கள் தான் என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொது வழியில் கோவிலுக்கு சென்றது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விளக்கம் கொடுத்துவிட்டார் அதை தாண்டி நான் விளக்கம் அளித்தால் நன்றாக இருக்காது என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img