Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

தூத்துக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

தூத்துக்குடி போல்பேட்டை, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்ரீ போத்தி விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் வருஷாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
விழாவையொட்டி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளும், 10 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., மறைந்த என்.பெரியசாமியின் நினைவாக, அவரது வாரிசும் முன்னாள் அமைச்சருமான பி.கீதாஜீவன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாலை பலிபீட பூஜை, அலங்கார தீபாராதனையை தொடர்ந்து நெல்லை ரிதம் இசைக்குழுவின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் தர்மகர்த்தா ராஜா பெரியசாமி தலைமையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

படிக்க வேண்டும்

spot_img