Homeபிற செய்திகள்முதுமலை புலிகள் காப்பக விநாயகர் கோவிலில் மணியடித்து வழிபாடு நடத்திய யானைகள்

முதுமலை புலிகள் காப்பக விநாயகர் கோவிலில் மணியடித்து வழிபாடு நடத்திய யானைகள்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட யானைகள் வளர்ப்பு முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. முகாமிலுள்ள உள்ள விநாயகர் கோயிலை சுற்றி மணி அடித்தவாறு மண்டியிட்டு விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமில் குட்டி யானைகள் உட்பட 23 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வருடம் தோறும் விநாயகர் சதூர்த்தி விழா முதுமலையில் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் கோலாகலமாக நடைபெறும்.
இந்த வருடம் முதுமலையில் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாட்டது. முன்னதாக யானைகளை மாயாற்றில் குளிக்க வைத்து பின்னர் சந்தனம், குங்குமம் மூலம் அலங்கரிக்கப்பட்டு முகாமில் யானைகள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டன. பின்னர் முகாமிலுள்ள விநாயகர் கோவிலில் கிருஷ்ணா மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரரஸ் ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மி ஆகிய வளர்ப்பு யானைகள் கோவிலை 3 முறை சுற்றி மணியடித்தவாறு வந்தது.

பின்னர் கோவிலின் முன்பு கிருஷ்ணா யானை தும்பிக்கையை தூக்கி பிளறியபடி விநாயகப் பெருமானை வணங்கின. அப்போது விநாயகர் கோயிலின் முன்பு நிற்க வைக்கப்பட்டிருந்த மீதமுள்ள யானைகளும் தும்பிக்கையை உயர்த்தி பிளரி சத்தமிட்டு வழிபட்டன. இந்த காட்சிகளை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். பின்பு யானைகளுக்கு சிறப்பு உணவான வெல்லம், ராகி , பொங்கல், ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, கரும்பு, பல சத்து வகைகள் அடங்கிய சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன . இந்த விழாவில் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல இணை இயக்குனர் வித்யாதர் அவர்கள் கலந்து கொண்டு யானைகளுக்கு பழங்களை வழங்கினர். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்தன

படிக்க வேண்டும்

spot_img