fbpx
Homeதலையங்கம்சபாஷ் இந்தியா!

சபாஷ் இந்தியா!

ஒலிம்பிக்கின் இந்திய ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. பாராட்டுக்கள்.

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

ஒரு காலத்தில் ஹாக்கியில் கோலோச்சி வந்தும் 8 முறை தங்க பதக்கத்தை அறுவடை செய்திருந்த இந்திய அணியின் நீண்டகால தடுமாற்றத்தால் ரசிகர்கள் ஏங்கி போயிருந்தனர்.

இந்த வெண்கல பதக்கத்தின் மூலம் இந்திய அணி ரசிகர்களின் நெடுங்கால தாகத்தை தணித்து இருப்பதுடன், இழந்த பெருமையை மீட்டெடுத்துள்ளது.

பதக்கத்தை வென்ற வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடினர்.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்க தொடர்ந்து முயற்சிப்போம்.

படிக்க வேண்டும்

spot_img