Homeபிற செய்திகள்குட் ஷெப்பர்ட் பள்ளி நிறுவனர் நாள் விழா

குட் ஷெப்பர்ட் பள்ளி நிறுவனர் நாள் விழா

கோத்தகிரி குட் ஷெப்பர்ட் சர்வதேசப் பள்ளியின் நிறுவனர் நாள் விழா, அக்.16ல் நடந்தது. இதில், பள்ளியின் 1984ம் ஆண்டு முன்னாள் மாணவரும், நாடக இயக்குநருமான ராய்ஸ்டன் ஏபெல், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இதில் மாணவர்களின் அணிவகுப்பு, இசைக்குழு நிகழ்ச்சி, நடனம், மலையேற்றத் திறன் காட்சி, குதிரை சவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவில், பள்ளித் தலைவர் ஜேக்கப் தாமஸ், மூத்த துணைத் தலைவர் சாரா ஜேக்கப், பள்ளித் தலைவர் வினோத் சிங், தலைமையாசிரியர் தீபா சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவர்கள், பெற்றோர், பாதுகாவலர்களும் கலந்து கொண்டனர். ராய்ஸ்டன் ஏபெல், மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

படிக்க வேண்டும்

spot_img