fbpx
Homeபிற செய்திகள்கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ரூ.1585 கோடியில் பணிகள் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் ரூ.1585 கோடியில் பணிகள் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் பொதுப்பணித் துறை சார்பில் ரூ.1585 கோடி மதிப் பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கோவை மாவட்டம் எஸ்.என்.ஆர். கலையரங் கத்தில் நேற்று பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர் களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வீட்டு வசதிமற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய் தித்துறை அமைச் சர் மு.பெ.சாமி நாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியா ளர்க ளிடம் தெரிவித்ததாவது:

பொதுப் பணித் துறையில், கோவை மாவட்டத்தில் ரூ.362 கோடி மதிப்பில் 51 பணிகளும், திருப்பூர் மாவட்டத்தில் ரூ.496 கோடி மதிப்பில் 68 பணிகளும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.182 கோடி மதிப்பில் 45 பணிகளும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.504 கோடி மதிப்பில் 20 பணிகளும், கரூர் மாவட்டத்தில் ரூ.41 கோடி மதிப்பில் 46 பணிகளும்என மொத்தம் ரூ.1585 கோடி மதிப்பில் 230 பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

100 ஆண்டுகள் பழமையான கட்டிடங்கள் உறுதி தன்மையுடன் உள்ளதை காண்கிறோம். அதுபோல் உறுதியான கட்டிடங்களை கட்ட வேண்டும் அவ்வாறு தரமான கட்ட டங்களை கட்டுவதற்கு தண்ணீர், மண், சிமெண்ட், ஜல்லி, இரும்பு கம்பிகள் ஆகியவற்றை உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.

மணலுக்கு பதிலாக எம்சாண்ட் பயன்படுத்தும் போது அவற்றையும் பரிசோ தனை செய்ய வேண்டும்.

கான்கீரிட்க்யூப்களை 7 நாட்களுக்குஒருமுறையும், 28 நாட்களுக்கு அதன்உறுதி தன்மையைபரிசோதிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கரூரிலிருந்து கோவைக்கு வரும் வழியில் விபத்துகள் அதிகமாக நடை பெறுகின்றன.

எனவே அந்தவழியில் உள்ளசாலையினை நான்கு வழிசாலையாக அமைக்க வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலை அல்லது தேசியநெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் பசுமை சாலை அமைப் பதற்கான நட வடிக்கை மேற்கொள் ளப்படும். இவ்வாறு அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர்மரு. சந்தீப் சக்சேனா, மாவட்ட ஆட்சியர்கள் டாக்டர்ஜி.எஸ்.சமீரன் (கோவை), ஜெ.இன்னசென்ட் திவ்யா (நீலகிரி), டாக்டர்எஸ்.வினீத் (திருப்பூர்), ஹெச்.கிருஷ்ணனுண்ணி (ஈரோடு), த.பிரபுசங்க ர்(கரூர்), சட்டமன்ற உறுப்பி னர்கள் க.செல்வராஜ் (திருப்பூர் தெற்கு)ஏ.ஜி. வெங்கடாசலம் (அந்தியூர்), இ.திருமகன் (ஈரோடு கிழக்கு), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி),, க.சிவ காமசுந்தரி (கிருஷ்ண ராயபுரம்), ஆர்.மாணிக்கம் (குளித்தலை), பொதுப் பணித் துறை தலைமை பொறியாளர் எல்.ரவிச்சந்திரன், தலைமைப் பொறியாளர் (நெ) திட்டங்கள்எம்.முருகேசன் தலைமை ப் பொறியாளர்(நெ) நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் இரா.கீதா, தலைமை பொறியாளர்(நெ) தேசிய நெடுஞ்சாலைத் துறை. பாலமுருகன், தலைமைப் பொறியாளர் (நெ)கட்டுமானம் மற்றும் பராமரிப்பு இரா. சந்திரசேகர், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img