fbpx
Homeதலையங்கம்கோவையில் ஸ்கோடா குஷாக் புதிய கார் அறிமுகம்

கோவையில் ஸ்கோடா குஷாக் புதிய கார் அறிமுகம்

கோவையில் புதிய ஸ்கோடா “குஷாக்“ புதிய ரக காரை 10.49 லட்சம் ஆரம்ப விலையில் ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது.

வடிவமைப்பு, செயல்திறன், தரம், சிறந்த பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட TSI டெக்னாலஜி கொண்ட 2 என்ஜின் தொழில்நுட்பத்தில் இந்த கார் இயங்குகிறது.

6 ஸ்பீடு கியர்களுடனும், ஹனி ஆரஞ்சு, டொர்னாடோ ரெட், கேண்டி வைட், ரிஃப்ளெக்ஸ் சில்வர் மற்றும் கார்பன் ஸ்டீல் உள்ளிட்ட 5 வண்ணங்களில் கிடைக்கிறது.

4 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ உத்தரவாதத்துடன் கிடைக்கிறது. 85 நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது.

கோவையில் SGA ஸ்கோடா வில் புதிய ஸ்கோடா ‘குசாக்‘ காரை நிறுவன இயக்குனர் அற்புத ராஜ், இயக்குனர் செல்வராஜ், செயல் இயக்குனர்கள் மரிய பிரகாஷ்,ஞானம் செல்வராஜ்,அகிலா அற்புதராஜ்,சைனி பார்பரா ஆகியோர் அறிமுகபடுத்தினார்கள்.

மேக் இன் இந்தியா 2.0 திட்டத்தில் ஸ்கோடா ‘குஷாக்‘ வருவதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யூவிக்கான விலைகளை விட குறைவான விலையில் கிடைக்கிறது.

இந்நிகழ்ச்சியில் எஸ்ஜிஏ கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் டீலர் பிரின்சிபல் எஸ். அற்புதராஜ் கூறுகையில், “எங்கள் தயாரிப்பு அறிமுகங்களுடன் அதிகரித்து வரும் தேவைகளை பூர்த்திசெய்து வெற்றி பெற்றுள்ளோம்.

மேலும் வாகன சந்தையில் புதிய ரக கார்களை அறிமுகபடுத்துவதில் பெருமை கொள்கிறோம். அனைத்து வித வசதிகளும், புதிய ஸ்கோடா ‘குஷாக்கிலும்‘ கிடைக்கிறது.

எங்கள் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் கருர் நகரங்களில் எங்கள் உலகத்தரம் வாய்ந்த ஷோரூம்களில் புதிய ரக ‘குசாக்‘ கார்களின் முன்பதிவு துவங்கியுள்ளது என்று தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img