Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சி: அமைச்சர் வன்னி அரசு பங்கேற்றார்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இந்திய அரசியலமைப்பு நாள் நிகழ்ச்சி: அமைச்சர் வன்னி அரசு பங்கேற்றார்

சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் இருக்கை சார்பில் இந்திய அரசியலைமைப்பு நாள் நிகழ்ச்சி நேற்று (வியாழக்கிழமை) பல்கலைக் கழக சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர் டாக்டர் அம்பேத்கர் இருக்கை சௌந்திரராஜன் வரவேற்புரையாற்றினார். பல்கலைக்கழக துணை வேந்தர் (பொ) செல்வ நாராயணன் தலைமை உரையாற்றினார். பதிவாளர் (பொ) குமரன் முன்னிலை வகித்தார்.
இந்திய மொழிப்புலம் புல முதல்வர் சரண்யா வாழ்த்துரை வழங்கினார். உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றினார். நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்து கொண்டார். முன்னதாக இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழியை அனை வரும் ஏற்றனர். அம்பேத்கர் இருக்கையின் சார்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். முடிவில் அம்பேத்கர் இருக்கை உதவி பேராசிரியை ராதிகாராணி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img