பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் தேவகோட்டை கிளை, திருப்பத்தூர் சாலை, எஸ்.பி.ஐ காலனி, வி.ஆர்.மஹாலில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தேவக்கோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் எஸ்வி.ஏஎன்.லெஷ்மணன், நக்ஷத்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டாக்டர் ஏ.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் தேவகோட்டை உதவி ஆட்சியர் ராகுல் குமார் ஐ.ஏ.எஸ். திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். அருகில் வங்கியின் கோவை மண்டல மேலாளர் பாலாஜி எஸ்.என், கோவை மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் விக்னேஷ், கிளை மேலாளர் ஆர்.அமர்நாத் உள்பட பலர் உள்ளனர்.



