ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரையில் கீழக் கரை ரோட்டரி சங்கத் தலைவராக பொறியாளர் கபீர் மற்றும் செயலாளராக சுப்ரமணியம் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு நடைபெற்றது.
அதில் ப்ளஸ் டு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற இஸ்லாமிய மெட்ரிக் பள்ளி மாணவி மாஹினா ரீம், ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சல்மத் ரிஃபா உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் ஹசனுதீன், பேராசிரியர் ஆசிப், கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், கீழக்கரை விசிக நகரச் செயலாளர் பாசித் இல்யாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



