fbpx
Homeதலையங்கம்காந்திக்கு எதிராக பொய்ப்பிரசாரம்!

காந்திக்கு எதிராக பொய்ப்பிரசாரம்!

நம் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் மிகவும் பிரதானமானவர் மகாத்மா காந்தி. ஏனென்றால் இவர் அகிம்சை வழியாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி நமக்காக சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தார்.

அவரை நாம் தேசத்தந்தை என்றும் மகாத்மா என்றும் அழைக்கிறோம். இதனால் அவரை பெருமைப்படுத்தும் விதமாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் அவரின் உருவப்படம் பொறிக்கப்பட்டிருக்கும்.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது வேறு தலைவர்களின் உருவப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது தேசப்பற்று உள்ளோரை திகைக்க வைத்தது.

இந்நிலையில் அதற்கு ரிசர்வ் வங்கி தற்போது மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளது. அதன்படி ரூபாய் நோட்டுகளில் மாற்றம் எதுவும் செய்யப்படாது.

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது, அப்பாடா... என நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.

அப்படியானால் மகாத்மா காந்தி படம் ரூபாய் நோட்டுகளில் இருந்து அகற்றப்படும் என்ற தவறான தகவலைப் பரப்பியது யார்? யாராக இருந்தாலும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.

இல்லையென்றால், இதுபோன்ற நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பொய்ச் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கும். அதற்கெல்லாம் பதில் & விளக்கம் தருவதே அரசுத் துறைகளின் முக்கிய வேலையாகி விடும்.

இதனை தடுத்தே ஆக வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img