திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் ஆனி மாத பௌர் ணமி விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன் னேற்பாடு பணிகள் குறித்து பல் வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அருணாசலேசு வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் மற்றும் 14 கி.மீ. நீள கிரிவலப் பாதையில் கிரிவலம் வருவதற்காக வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
வரும் ஜூன் 29-ம் தேதி அதிகாலை 4.22 மணிக்கு பௌர்ணமி துவங்கி, ஜூன் 30-ம் தேதி அதிகாலை 6.11 மணி வரை நடைபெறுகிறது.
இதனால் அதி களவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர், கழிவறை, மின்வசதி, போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கிரிவலப் பாதையில் சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும், கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும், உணவகங் கள் மற்றும் அன்னதான மையங்க ளில் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிறதா என் பதை கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட் டது.
மேலும், பக்தர்களுக்கு இடை யூறு விளைவிக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், கழிவறைகளை தூய் மையாக பராமரிக்கவும், கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமிக்கவும் வலியுறுத்தப்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவ முகாம்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.
காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள், நிழற்பந்தல்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.



