சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த காவலர் ரவி மற்றும் சிறப்பு எஸ்.ஐ. பொன்னரசு ஆகியோர் பணியின்போது உயிரிழந்தனர். ஆணையர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில், தமிழக அரசு ஊழியர்கள் சம்பள கணக்கு காப்பீட்டுத் தொகை திட்டத்தின் கீழ், சேலம் குகை பேங்க் ஆஃப் பரோடா கிளை சார்பில் இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.15 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. காசோலைகளை துணை ஆணையர் கீதா முன்னிலையில் வங்கியின் மண்டல மேலாளர் கருணாகர் ரெட்டி வழங்கினார்.



