பள்ளிக்கு சென்று படித்தால் தான் ஒழுக்கம், நேரம் தவறாமை, நண்பர்களுடன் பழகுதல், ஐயம் தெளிதல், விளையாட்டு போன்ற விஷயங்களில் முழுமை கிட்டும். அதற்கு விரைவில் புதிய ஆரம்பம் கிடைத்திருப்பது ஆரோக்கியமான விஷயம்.
ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் கற்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.
மருத்துவம் சார்ந்த கல்லூரிகளும் இந்த மாதம் 16ம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. மற்ற கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் எல்லா வேலை நாட்களும் கல்லூரிக்கு சென்று ஆன்லைன் மூலம் வகுப்பெடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஆசிரியர்களும், பணியாளர்களும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
மூன்றாவது அலை வரப்போகிறது என்ற எச்சரிக்கை இருப்பதையும், நம் மாநிலத்தில் கட்டுக்குள் இருந்தாலும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனா அதிகரித்திருப்பதையும் கவனத்தில் கொண்டு மாணவர்கள் தொடர்ந்து முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளி போன்றவற்றில் அலட்சியம் காட்டாமல் மிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.



