fbpx
Homeபிற செய்திகள்கோவையில் காவல்துறை சுதந்திர தின விழா ஒத்திகை

கோவையில் காவல்துறை சுதந்திர தின விழா ஒத்திகை

கோவை வ.உ.சி மைதா னத்தில் காவல் துறையின் சார்பில் சுதந்திர தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

ஆகஸ்டு 15 ம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை வஉசி மைதானத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தேசிய கொடியேற்றுகிறார்.

இதற்காக இன்று இம்மைதானத்தில் காவல் துறை சார்பாக அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒத்திகை அணிவகுப்பில் நூற்றுக்கு மேற்பட்ட போலீஸார் கலந்து கொண் டனர். கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img