ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ்[ICICI Prudential Life Insurance] தனது வாடிக்கையாளர்களுக்கு யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆட்டோபே[Unified Payments Interface (UPI) AUTOPAY] வசதியை வழங் குவதற்காக, என்பிசிஐ [National Payments Co rporation of India (NPCI)] உடன் புதிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த புதிய கூட்டு செயல்பாட்டின் மூலம், வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடியே, வகையில் காப்பீட்டு பாலிசி களை வாங்கவும், பிரீமியம் பணம் செலுத்தவும் முடியும்.
வாடிக்கையாளர்கள் பேடிஎம் [Paytm], பீம் [BHIM] போன்ற யுபிஐ அப்ளிகேஷன்களில் யுபிஐ ஆட்டோபே வசதியை செயல்படுத்தலாம்.
இந்த வசதியை ஐசிஐசிஐ வங்கி மற்றும் இதர வங்கிகளுக்கு மின்னணு ஆவணப்படுத்துதல்[e-mandate] மூலம் மேற்கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் ஒரே தவணையில் பிரீமியம் தொகை முழுவதையும் செலுத்துவது, மாதாந்திர முறை, காலாண்டிற்கு ஒரு முறை, அரையாண்டுக்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை என வசதியான முறைகளில் பிரீ மியம் தொகை செலுத்தும் வாய்ப்பையும் இது அளிக்கிறது.
ஐசிஐசிஐ ப்ரூடென் ஷியல் லைஃப் இன்சூ ரன்ஸ் நிறுவனத்தின் வாடிக் கையாளர் அனுபவம் மற்றும் செயல்பாடுகள் பிரிவின் தலைமை நிர்வாகி ஆஷிஷ்ராவ் கூறும்போது, இந்த கூட்டு செயல்பாடு எங்களது வாடிக்கையாளர்கள், தங்களுடைய ஆயுள் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரமியம் தொகையை எளிமையான முறையில் செலுத்துவதற்கு உதவும்.
என்பிசிஐ உடன் கூட்டு செயல்பாட்டு பங்குதார நிறுவனமாக கைகோர்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நீண்ட கால சேமிப்பு தேவைகளுக்கு அவசியமானவற்றை புரிந்து கொள்வதில் அதிக அக்கறை காட்டி வருகி றோம் என்றார்.



