எல்லாவற்றிற்கும் பணிவோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நமது நாட்டை வலிமையாக மாற் றுவதற்கு நீங்கள் கற்ற கல்வியை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது அவசியம் என்று இஸ்ரோ தலைவர் சோமநாத் பேசினார்.
கோவை, காருண்யா தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல் கலைக்கழகம்) 26-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
துணைவேந்தர் மன்னர் ஜவஹர் வரவேற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவரும், விண் வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமநாத் பட்டமளிப்பு விழா பேருரை நிகழ்த்தினார்.
அவர் பேசுகையில், இச் சிறந்த கல்வி நிறுவனத்தின் நவீன உள்கட்டமைப்பினாலும், சிறந்த கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளாலும், உங்களின் கடின உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும் வெற்றிகரமாக பட்டம் பெறுகிறீர்கள்.
இன்று சவால் கள் நிறைந்த ஒரு புதிய கட்டத்திற்கு உங்கள் வாழ்வு நகருகின்ற தருணம். தைரியமாக, அறிவுப்பூர்வமாக சவாலான தொழில்வாய்ப்புகளை தேர்ந்தெடுங்கள்.
தற்போதைய விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர் களின் சவால்கள், முந்தைய தலை முறையினரின் சவால்களினின்று வேறுபட்டவை. எனவே அந்தந்த துறைகளில் நிபுணத்துவம் மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர்களால் மட்டுமே பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
எனவே, கற்றல் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். உங்களிடம் பேரார்வம் இருக்க வேண்டும். எப்போதும் மாணவராகவே இருங்கள். எல் லாவற்றிற்கும் பணிவோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நமது நாட்டை வலிமையாக மாற் றுவதற்கு நீங்கள் கற்ற கல்வியை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது அவசியம்.
நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட இருக்கும் உங்களை வாழ்த்துகிறேன் என்றார். இணைவேந்தர் டாக்டர் இ.ஜே.ஜேம்ஸ் ஆண்டறிக்கை வாசித்தார். பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., பி.பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. (விவசாயம்), பி.எஸ்.சி. (தோட்டக்கலை), எம்.எஸ்சி., எம்.ஏ. மற்றும் பி.எச்டி முனைவர் படிப்புகளை வெற்றிகரமாக முடித்த 1698 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் காருண்யா நிகர் நிலைப் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன். அவர் மாணவர்களை வாழ்த்தி பேசியதாவது:
இம்மகிழ்ச்சியான தருணத்தில் நீங்கள் காருண்யாவில் சிறந்த கல்வியோடு நீங்கள் பெற்றுக் கொண்ட முன்மாதிரியான நற்கு ணங்களை தொடர்ந்து உங்கள் வாழ்வில் கடைபிடிப்பீர்கள் என்று மனதார நம்புகிறேன். தொழில் துறையில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய உண்டு.
ஆகினும் நீங்கள் கற்ற கல்வியும், சிறந்த வாழ்க்கை நெறி முறைகளும் வெற்றியடைய வழிகாட்டும். உங்கள் பெற்றோருக்கும், கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றியுள்ளவர்களாக இருங்கள். காருண்யா உங்களுக்கு மற்றொரு வீடு போன்றது.
இதன் கதவுகள் திறந்தே இருக்கும். நீங்கள் வந்து உங்கள் ஆசிரியர்களுடனும், மாணவர் களுடனும் உரையாடலாம். பாரத தேசத்தை உலகளாவிய அளவில் எல்லா துறைகளிலும் சிறந்த தேசமாக மாற்ற வேண்டும் என்றார்.
இஸ்ரோ தலைவர் சோமநாத், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிஸ் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சுழல் ஆய்வுத் துறையின் தலைவர் பேராசிரியர் கொலின் பிரைஸ் ஆகி யோரின் சேவைகளைப் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டன.
முதுகலை பொறியியல் துறையில் (எம்.டெக்.) சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்படட பிரின்ஸ் ஆலன் ஜெபக்குமார், இளங்கலை பொறியியல் (பி.டெக்.) துறையில் சிறந்த மாண வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில் வெஸ்டர் ஜோனி, இளங்கலை (கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை) துறையில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெபின் கே.டானி, முதுகலை (கலை, அறி வியல் மற்றும் மேலாண்மை) துறையில் சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெஸ்லினா சாரோன் ஆகியோருக்கு வேந்தர் விருதுகள் வழங்கப்பட்டன.
பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் சமுதாய பற் றினை பறைசாற்றும் வண்ணமாக சீஷா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டியும், நான்கு சக்கர நாற்காலிகளையும் வழங்கினர்.
இவாஞ்சலின் பால் தினகரன், டிரஸ்டி சாமுவேல் தினகரன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர், இணை துணைவேந்தர்கள் ரெட்லிங் மார்கரேட் வாலர், இ.ஜே.ஜேம்ஸ், பதிவாளர் எலைஜா பிளசிங் பல் கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எலிசபெத் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.



