fbpx
Homeபிற செய்திகள்8-வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி

8-வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வெற்றி

சேலம் ஒன்றியம், ஆண்டிபட்டி இனாம் வேடுகத்தாம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் முருகன் வெற்றி பெற்றார்.

காலியாக இந்த இடத் திற்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று அறிவிக்கப்பட்டது.

எட்டாவது வார்டில் மொத்த வாக்குகள் 7683 வாக்குகள். இதில் திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் முருகன் 4126 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்டவரை விட 2193 வாக்குகள் அதிகம் பெற்றார்.

இவரை எதிர்த்து அதிமுக ஆதரவில், தென் னைமரம் சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் வெங்கடேஸ் வரன் பெற்ற வாக்கு 1935.
வெற்றிக்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் திமுக வேட் பாளர் முருகன் பெற்றுக் கொண்டார்.

இவருடன் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், திமுக சேலம் ஒன்றிய செயலாளர் மாணிக்கம், ஏ ஏ ஏ ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.

கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கினர்,
மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து அப்பகுதி பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் முருகன். திமுக கட்சி நிர்வ £கிகள், தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img