ஹெலிகாப்டர் தயாரிப்பதை திரைப்படத்தில் பார்த்த ஒரு இளைஞர் அதை தயாரிக்க முற்பட்ட போது இறக்கை வெட்டி பரிதாபமாக இறந்தார்.
3 முட்டாள்கள் என்ற திரைப்படத்தை பார்த்த இப்ராஹிம்(24) என்ற வாலிபர் ஹெலிகாப்டர் தயாரிக்கும் முறையை யூடியூபில் பார்த்து தெரிந்து கொண்டார்.
பின்னர் மாருதி 800 என்ற கார் என்ஜின் உள்ளிட்ட ஹெலிகாப்டர் தயாரிப்புக்கு தேவையான பொருட்களை திரட்டினார். 2 ஆண்டுகால முயற்சிக்குப்பிறகு ஹெலிகாப்டரை தயாரித்தார்.
கடந்த 10ம் தேதி தான் தயாரித்த ஹெலிகாப்டரில் பைலட் இருக்கையில் அமர்ந்து பறக்க தொடங்கினார்.
அப்போது ஒரு இறக்கை மற்றொரு இறக்கையின் மீது இடித்து உடைந்தது. அதில் உடைந்த ஒரு பாகம் இப்ராஹிம் என்ற வாலிபரின் தொண்டையை வெட்டியது.
இதனால் நிலைகுலைந்த இப்ராஹிம் ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே இப்ராஹிம் மரணமடைந்து விட்டார்.
ஹெலிகாப்டர் தயாரித்து இயக்கிய வாலிபர் இறக்கை வெட்டி உயிரிழந்த சம்பவம் பரிதாபமாக இருந்தது. இப்படியும் ஒருவரா? என அருகில் இருந்தவர்கள் திகைத்தனர்.



