fbpx
Homeபிற செய்திகள்கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

கோவை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன் னிட்டு கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் மத்திய அரசின் மாநில வனத்துறை அதி காரி டாக்டர் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் முனைவர் அகிலா சிறப்புரையாற்றினார். கல்லூரி தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி வழி காட்டுதலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தேசிய மாணவர் படை பிரிவு அதிகாரி லெப்டினன்ட் முனைவர் ஏ.கே.பிரியா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி முதல்வர் நட்டனர், இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img