இந்தியாவில் 1990 ல் துவங்கிய ஜீன்ஸ் அலை, 2000ம் ஆண்டில் இளைஞர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பிராண்டுகள் உற்பத்தியானது; மாபெரும் சந்தையும் வந்தது.
கடந்த தொற்று காலத்திலும் நேர் மறையாகவே திகழ்கிறது. ஆன்லைன் வசதியால் கருத்தரங்கு அறைகளில் நடந்த கூட்டம், படுக்கை அறைகளிலும், ஓய்வ றைக்கும், தனி அறைக ளுக்கும் மாறியது.
வீடுகளிலிருந்து பணியாற்றும் வசதியால், புதிய விதிமுறைகள் வந்தன. புதிய ஆடை அணிமுறைகளும் இதில் ஏற்படுத்தப்பட்டன.
இந்த சமயத்தில், டிரிக்கர் ஜீன்ஸ் அணிப வர்கள், வசதியாகவும், பார்வைக்கு அழகாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் என எண்ணியது.
நல்ல தளர்வு தரும் வகையிலும், எளி மையாகவும், அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏற்ற வகையில் காற்றோட் டமாகவும் தயாரிப்புகள் இருக்க வேண்டும் என விரும்பியது. அதற்கான வடிவமைப்பையும், புதுமை யையும் ஏற்படுத்தியுள்ளது.
கேஜி டெனிம் நிறுவனத்தின் டிரிக்கர் அப்பேரல்ஸ் (டிரிக்கர் ஜீன்ஸ்) , தனது முத லாவது சர்வதேச தொடர்பு அலுவ லகத்தை ஆண்களுக்கான அனைத்து வகையான ஆடை கலெக்சனுடன் கோவையில் துவக்க தயாரானது.
டிரிக்கர், இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட விற்பனையகத்தை கொண்டுள்ளது. இதில் 80 பெரிய விற்பனையகங்கள் உள்ளன. சிங்கப்பூர், துபாய் மற்றும் மலேசியா உள்ளிட்ட நகரங்களில் 100க்கும் மேற்பட்ட தனித்துவமிக்க விற்பனையகங்களைக் கொண்டுள்ளன. புதிய நிறுவன தலைநகரை “விஷன் 2022” என்ற தொலைநோக்கோடு துவங்கியுள்ளது.
வரும் ஆண்டுகளில் ஏற்கனவே உள்ள விற்பனையகங்களுடன் 250 விற்பனையகங்களை திறக்கவும், 1000 க்கும் மேற்பட்ட விற்பனை யகங் களை மேலாண்மை செய்யவும் மேம்படுத்தவும் இந்த தலைமையகம் செயல்படும். டிரிக்கர், அமெரிக்காவின் ஏபிஜி குழுமத்துடன் இணைந்துள்ளது. அங்கிருந்து “லக்கி பிராண்ட்” ஆக இந்திய சந்தையில் வலம் வரவுள்ளது.
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிலையான தயாரிப்பை வழங்கவும், சந்தையில் இரண்டாவது மிகப்பெரும் உற்பத் தியாளராக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.
தலைமயகத்தின் துவக்க விழா டிசம்பர் 14ம் தேதி, காலை 10.30 மணிக்கு நடந்தது. கோவை கேஜி ஹவுசில் நடந்த விழாவில், கோவை கே.ஜி குழுமத்தின் தலைவர் கே.ஜி பாலகிருஷ்ணன் மற்றும் சத்ய பாமா, கே.ஜி.டெனிம், நிர்வாக இயக்குனர் ஸ்ரீராமுலு மற்றும் சீனிவாச கார்மெண்ட்ஸ் தலைவர் பிரணவ் ஆகியோர் பங்கேற்று கவுரவித்தார்கள்.



