மிந்த்ரா தனது பிராண்ட் அம் பாசிடராக இருக்கும் சமந்தா அகினேனி பங்கேற்ற இரு விளம்பர குறும்படங்களை இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்டது.
இந்தியாவின் ஃபேஷன் எக்ஸ்போர்ட் என்ற தனது நிலையை மேலும் நிலைநிறுத்திக் கொள்ள, இந்த விளம்பரப் படங்களை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
திரைப்பட நடிகை மற்றும் நவீன யுவதியாக அடையாளம் காணப்பட்டு மக்களின் மனதில் இடம் பெற்றவர் சமந்தா.
பெண்களின் ரசனை களை ஊக்குவிக்க, மேற்கத்திய கலாச்சார உடைகள், பாரம் பரிய உடைகள் என இருவித தோற்றங்களில் நடித்த இரண்டு விளம்பரப் படங்கள், தெற்கில் எலக்ட்ரானிக் மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஒளிபரப்பாக உள்ளன.
திரைப்படத்துறையில் மிகவும் ஆளுமை பெற்றவர் சமந்தா.
நான்கு முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். இவர் பல மாநிலங்களில் உள்ள வீட்டுப் பெண்களின் மனதை ஆட்கொண்டவர்.
பல மொழி திரைப் படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து விமர்சன ரீதியாக பாராட்டப் பெற்றவர். ஓடிடி தளங்களின் வாயிலாகவும் இவர் மிகவும் அறி யப்பட்டவர்.
மிந்த்ராவின் பிராண்ட் அம்பாசிடர் சமந்தா, விளம்பரப் படங்கள் வெளியீட்டு விழாவில் பேசும்போது, நான் சுமார் ஓர் ஆண்டாக மிந்த்ராவுடன் பயணிக்கிறேன்.
அந்த அனுபவம் மிகவும் நிறைவைத் தருகிறது. ஃபேஷன் என்பது எனது தினசரி செயலாகும்.
புதிய தோற்றங்களை அடிக்கடி பரிசோதிக்க நினைக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் தற்போதைய தேவையை உணர்ந்து அதற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து தருவதில் மிந்த்ரா எப்போதும் பின் தங்கியதே இல்லை.
புதிய விளம்பரப் படங்களில் ஒரு பகுதியாக நான் இருப் பதில் பெருமைப்படு கிறேன். தங்களுக்கு பிடித்த ஸ்டைலில் எனது ரசிகர்களை மிந்த்ராவுடன் நெருக்கத்தை அதிகரிக்கச் செய்கிறேன் என்றார்.
மிந்த்ராவின் சிஎம்ஓ ஹரிஷ் நாராயணன் பேசுகையில், சமந்தாவின் நடிப்பு திறமையும் மற்றும் பேஷன் தேர்வுகளும் அனைவராலும் பேசப்படுகின்றன.
தெற்குப் பகுதியில் உள்ள ரசிகர் பட்டாளம் அவரது ஃபேஷன் உணர்வுகளை விரும்புகிறது. இளைஞர்களின் பேஷன் தேர்வுகளில் அவரது செல்வாக்குக்கு ஈடு இல்லை என்றார்.



