fbpx
Homeபிற செய்திகள்ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமையேற்றார்.
பொதுச்செயலாளர் பாரி அறிக்கை வாசித்தார். பொருளாளர் விஜயபாஸ்கர் அறிக்கை சமர்ப்பித்தார்.

முன்னாள மாநில பொதுச்செயலாளர் மயில்சாமி சிறப்புரை வழங்கினார். கோவை மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார்.

மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார் கோவை மாவட்ட கோரிக்கைகளை வழங்கினார். மாவட்ட தலைவர் ஆசிக் அலி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழகமெங்கும் இருந்து மாவட்டத்திற்கு ஒருவர் என 22 மாவட்டத்திலிருந்து கலந்துகொண்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் பொதுச்செயலாளர் மயில்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகி சாகுல் ஹமீது ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

படிக்க வேண்டும்

spot_img