தென் தமிழகத்தில் முதல் முறை யாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஆக.28) ‘தாய்ப்பால் வங்கி’ தொடங்கப்பட் டது.
கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ், ஆவாரம்பா ளையத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் காட்டன் சிட்டி இணைந்து, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் தாய்ப்பால் வங்கியை தொடங்கியுள்ளது.‘Nectar Of Life’ என்பது இதன் மையக் கருவாகும்.
விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி தலைமை வகித்தார். 3201 ரோட்டரி மாவட்ட கவர்னர் ராஜசேகர் ஸ்ரீனி வாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தாய்ப்பால் வங்கியைத் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் காட்டன் சிட்டி தலைவர் டாக்டர் நீதிகா பிரபு, இணைத் தலைவர் ராகேஷ்குமார் ரங்கா, தலைவர் அஜய்குமார் குப்தா, சமூகச் சேவை இயக்குநர் தருண்குமார் ரங்கா, செய லாளர் குமார்பால் டாகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட் டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர், தலைமைச் செயல் அதிகாரி ஸ்வாதி ரோஹித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைச் செயல் அலுவலர் சி.வி. ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தனியார் துறைகளில் தென் தமிழகத்தில் முதல் முறையாகவும், தமிழகத்தில் இரண்டாவது முறை யாகவும் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான கருவிகள் சர்வதேச ரோட்டரி யின் உதவியுடன் கோவை ரோட்டரி காட்டன் சிட் டியால் தருவிக்கப்பட்டுள்ளது.
பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில், அனுமதிக்கப் பட்டுள்ள தேவைப்படும் குழந்தை களுக்கு தாய்ப்பால் இலவசமாக வழங்கப்படும்.
தரமான தாய்ப்பாலுக்காக நுண்ணு யிரியல் மற்றும் அதி தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தாய்ப்பால் தானம் வழங்க முன்வரும் தாய்மார்களுக்கு சிறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தாய்ப்பால் பெற்றுக் கொள்ளப்படும்.
பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கான அவசரச் சிகிக்சைப் பிரிவுக்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கு, இந்த தாய்ப்பால் வங்கி வரப்பிரசாதமாக விளங்கும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கான பிரத்யேக பகுதியும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் வங்கியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



