fbpx
Homeதலையங்கம்உள்ளாட்சிகளில் மாற்றம் தருமா 50% இடஒதுக்கீடு?

உள்ளாட்சிகளில் மாற்றம் தருமா 50% இடஒதுக்கீடு?

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த தேர்தலில் முக்கியமான மாநகராட்சிகள் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தந்தை பெரியாரின் 90 ஆண்டுகளுக்கு முந்தைய கோரிக்கையான பெண்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்து சமூக நீதிக்கான சரித்திர நாயகராக ஒளிர்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன்படி, சென்னை மாநகராட்சி, தாம்பரம் மாநகராட்சியின் மேயர் பதவிகள் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆவடி மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியலின வேட்பாளருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை, அதில் உள்ள 200 வார்டுகளில் 16 வார்டுகள் பட்டியலினத்தவருக்கென பொதுவாகவும் 16 வார்டுகள் பட்டியலினப் பெண்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 84 வார்டுகள் பொதுப் பிரிவினரில் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகள் பொதுப் பிரிவில் பெண்களுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பெருமளவில் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது சமூகத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என இடங்களை ஒதுக்கீடுசெய்தால், அவர்களை முன்னிறுத்தி ஆண்களே ஆதிக்கம் செலுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்பிருந்தன. அது இப்போது மாறி வருகிறது.

துவக்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு என இட ஒதுக்கீடு வந்தபோது, பல இடங்களில் அவர்களது கணவர்கள் பதவியேற்றுக்கொண்ட சம்பவங்கள் எல்லாம் கூட நடந்தன.

தங்கள் கணவர்களின் செல்வாக்கைப் பயன்படுத்தும் விதமாக, அவர்களது பெயர்களை தங்கள் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ளும் போக்கும் துவங்கியது. ஆனால், தற்போது பெண்கள் சுயமாக முடிவெடுக்கும் சூழல் பல இடங்களில் ஏற்பட்டிருக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பெண்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். பட்டியலினத்தவருக்கு புதிய வழியைக் காட்டும்.

இது மாற்றத்தை உருவாக்கப்போகும் ஒரு யுகப் புரட்சியாகும்! முதல்வர் மு.க.ஸ்டாலினின் மவுனப் புரட்சியாகும்!

படிக்க வேண்டும்

spot_img