fbpx
Homeதலையங்கம்உயரிய விருது - தமிழக வீரர்களுக்கு ‘சல்யூட்’

உயரிய விருது – தமிழக வீரர்களுக்கு ‘சல்யூட்’

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தேர்வாகியுள்ளார்.


அத்துடன், மனிகா பத்ராவுக்குப் பிறகு, டேபிள் டென்னிசில் இருந்து கேல் ரத்னா விருது வெல்லும் இரண்டாவது நபராகியுள்ளார். மேலும், விஸ்வநாதன் ஆனந்த், மாரியப்பன் வரிசையில் கேல் ரத்னா விருது வெல்லப்போகும் தமிழர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்துக்காக விளையாடி வரும் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனு-க்கும் அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.

பாராலிம்பிக் பேட்மின்டன் போட்டியில் 3 தங்கப் பதக்கம் வென்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவி ஜெர்லின் அனிகாவும் அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளார்.

டெல்லியில் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் விழாவில், இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்க உள்ளார்.

விருதுகளை குவித்து தமிழகத்துக்கே பெருமை தேடித் தந்துள்ள வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழகம் பெருமிதம் கொள்கிறது. இன்னும் பல சாதனைகள் படைக்க வாயார வாழ்த்துவோம். வீர மறவர்களுக்கு ‘சல்யூட்’!

படிக்க வேண்டும்

spot_img