fbpx
Homeபிற செய்திகள்மாணவர்கள் போதைக்கு அடிமையாவது கவலையளிக்கிறது -கோவை பிஎஸ்ஜி கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

மாணவர்கள் போதைக்கு அடிமையாவது கவலையளிக்கிறது -கோவை பிஎஸ்ஜி கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

மாணவர்கள் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு அடிமையாவது கவலையளிக்கிறது என கோவை கல்லூரி விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 ஆண்டு பவள விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் பவள விழா நிகழ்ச்சியை முன்னிட்டு, கின்னஸ் சாதனை முயற்சியாக 75168 பானைகள் மூலம் 75 என்ற எண் வடிவமைக்கப்பட்டது.
இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதனை யடுத்து அவர் முன்னிலையில் அக்கல்லூரி முதல்வரிடம் கின்னஸ் சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாண வர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
3 நாட்கள் பயணமாக மேற்கு மண்டலத்திற்கு வருகை தந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் இங்கே வந்துள்ளேன். இதனை தனியார் நிகழ்ச்சியாக பார்க்கவில்லை.

எல்லோருக்கும் பொதுவான நிகழ்ச்சியாக பார்க்கிறேன். தனிப்பட்ட தனது குடும்பத்திற்காக மட்டும் வாழாமல் பொது நன்மைக்காக வந்தவர் பூ.சா.கோவிந்தசாமி. அவர் வணிகம், வேளாண்மையில் ஈட்டிய சொத்தை அறநி லையத்திற்கு பிரித்து கொடுத்தார். இந்த சிந்தனை 100 ஆண்டுக்கு முன்பே அவருக்கு தோன்றியது பாராட்டுக்குரியது.

1965 ம் ஆண்டில் ஆதிக்க இந்தி திணிப்பிற்கு எதிராக மாணவர் போராட்டம் நடந்தது. அப்போது தீ மூட்டியும், நஞ்சுண்டும் மொழி காவலர்கள் பலர் மரணம் அடைந்தனர்.

அதில் ஒருவராக தமிழுக்காக உயிர் கொடுத்த பீளமேடு தண்டாயுதபாணி, இந்த பிஎஸ்ஜி கல்லூரி மாணவர். இதேபோல சிவ்நாடார், மயில்சாமி அண் ணாதுரை ஆகியோரும் இக் கல்லூரி மாணவர்கள்.

இக்கல்லூரி தர வரிசையில் சிறப்பிடம் பெற்றுள்ளதுடன், 60 விழுக்காடு மாணவிகளும், 60 விழுக்காடு பெண் ஆசிரியர்களும் இருப்பது பாராட்டுக்குரியது என் றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு என்பது இந்தியா வில் உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம். தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் 21 தலை சிறந்த பல்கலைக்கழகங்கள், 32 தலைசிறந்த கல்லூரிகள், 10 ஆராய்ச்சி நிறுவனங்கள், 35 பொறியியல் கல்லூரிகள், 8 மருத்துவக்கல்லூரிகள் உள்ளிட் டவை உள்ளன.

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உயர்ந்து நிற்கிறோம். நீதிக்கட்சி போட்ட விதை இந்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சியை இந்தியா வியந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையில் உன்ன தமான பல திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

நான் மட்டும் முதல்வன் அல்ல. இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக வேண்டு மென நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து ஆற்றலும் கொண்ட இளைஞர்களாக மாணவர்கள் இருக்கின்றனர்.

ஆனால் மாணவர்கள் மற்றும் மாணவிகள் போதைப் பொருட்கள் பழக்கத்திற்கு அடி மையாவது கவலையளிக்கிறது. அப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக் கவும், புதிதாக அடிமையாவதை தடுக்கவும் விழிப்புணர்வு நிகழ்ச் சிகள் தொடர்ந்து நடத்தி வரு கிறோம்.

ஒரு மாணவர் போதைக்கு அடிமையாவது அவருக்கு மட்டுமின்றி குடும்பம் மற்றும் மாநில வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. நல்ல கல்வி மற்றும் நல்லொழுக்கத்தை மாணவர் களுக்கு அளிக்கும் கடமை கல்வி நிறுவனங்களுக்கு உண்டு, போதைக்கு அடிமையாகாமல் தடுக்க அனைத்து கல்லூரிகளுக்கும் கோரிக்கை வைக்கின்றேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img