fbpx
Homeபிற செய்திகள்‘இலவச மொபைல் ஆப்களைகவனமாக கையாள வேண்டும்’ கல்லூரி கருத்தரங்கில் அறிவுறுத்தல்

‘இலவச மொபைல் ஆப்களைகவனமாக கையாள வேண்டும்’ கல்லூரி கருத்தரங்கில் அறிவுறுத்தல்

கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சைபர் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. தமிழக மகளிர் ஆணைய தலைவர் குமாரி, தேசிய இணைய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் அமைப்பின் இயக்குனர் காளிராஜ் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர்.

கருத்தரங்கில் காளிராஜ் பேசியதாவது: சமூக வலைதளங்கள் வரமாக இருந்தது. அதனை நாம் சாபமாக மாற்றிவிட்டோம். அழிவின்பாதையில் கொண்டு செல்கிறோம். இறுதியில் தொழில் நுட்பத்தை தவறு என்று கூற வைத்து விட்டோம். இது ஆரோக்கியமான விஷயம் இல்லை. இலவசமாக கிடைக்கும் மொபைல் ஆப்கள் ஆபத்தானவையாக இருக்கக் கூடும். அதனை கவனமாக கையாள வேண்டும்.

சைபர் குற்றவாளிகள் சமூகத்தில் நமக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அதனை கொண்டு மிரட்டிபணம் பறிக்க முற்படுகிறார்கள்.
எவ்வித சைபர் குற்றங்களாக இருந்தாலும் எங்கள் மையங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலாளர் வாசுகி, முதல்வர் லட்சுமண சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img