fbpx
Homeபிற செய்திகள்மள்ளர் மீட்பு கழகம் சார்பில் தமிழர் அரசியல் வரலாற்று பெருவிழா

மள்ளர் மீட்பு கழகம் சார்பில் தமிழர் அரசியல் வரலாற்று பெருவிழா

மள்ளர் மீட்புக் களம் சார்பில் மீண்டெழும் பாண்டியர் வரலாறு, வேந்தர் குலத்தின் இருப் பிடம் எது? ஆகிய இரண்டு நூல்கள் மீதான தடைகள் தகர்க்கப்பட்ட நாள் மற்றும் தமிழர் மெய் வரலாறு மீட்பு நாள், தமிழர் அரசியல் வரலாற்று பெருவிழா திருச்சியில் நடைபெற்றது.

தமிழர் தாயகம் கட்சி மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.மள்ளர் மீட்பு கழகம் மாநில செய்தி தொடர்பாளர் பாசுக்கர சோழன் வரவேற்றார். ஊடகப் பிரிவு பொன் கிரேசி தொகுப்புரை வழங்கினார்.

நிர்வாகிகள் சுந்தர லட்சுமி, மேனகா, முத்துலட் சுமி, வினோதினி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

மள்ளர் மீட்பு கழகம் நிறுவனர் மற்றும் தமிழர் தாயகம் கட்சி நிறுவனர் செந்தில் மள்ளர் சிறப்புரை ஆற்றினார்.மாநிலத் தலைவர் தமிழ் மல்லன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்ட செயலாளர் ராசு மூப்பன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img