சேலம் நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ஆட் டையாம்பட்டி பேருந்து நிலைய மேற்கூரை மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறக்கப்பட்டது.
வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் வெண் ணிலா சேகர் தலைமை தாங்கினார். தலைவர் பேரூர் செயலாளர் முருக பிரகாஷ் முன்னிலை வகித்தார்.கவுன்சிலர் சாந்தி வர வேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப் பினர் எஸ்.ஆர். பார்த்திபன், திமுக கிழக்கு மாவட்ட பொறுப் பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் ரூ.69 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆட்டையாம்பட்டி பேருந்து நிலைய மேற் கூரை மற்றும் சிறுவர் விளையாட்டு பூங் காவை திறந்து வைத்து சிறப் புரையாற்றினர்.
பொதுமக்கள் 65 பேருக்கு முதியோர் உதவித் தொகையும், 20 பேருக்கு இலவச பட்டா மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருவருக்கு மூன்று சக்கர வாக னம் வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் களாக ஆட்டையாம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் கிருஷ்ண வேணி, பேரூர் அவைத்தலைவர் தாமரைச்செல்வன், பி.வி. ரமேஷ், கே.பி.எஸ். அன்பு, கலை மணி, மூர்த்தி, மாசிலாமணி, மோகனவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



