கோவை மாநகராட்சி கொடிசியா வளாகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் ஜோதியின் மாதிரி சுடரினை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோரிடம் கிராண்ட் மாஸ்டர் ஷ்யாம்சுந்தர் வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் சமீரன் (கோவை), கிருஷ்ணனுண்ணி (ஈரோடு), வினீத் (திருப்பூர்), அம்ரித் (நீலகிரி), மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உள்ளனர்.



