இந்தியாவில் மறுசுழற்சி செய்யத்தக்க பிளாட்டினா டூத்பேஸ்ட் டியூப்களை உற்பத்தி செய்வதற்காக, வாய் மற்றும் பற்கள் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமான கோல் கேட்-பாமோலிவ், உலகின் முன்னணி பேக்கேஜிங் நிறுவனமான ஈபிஎல் (EPL) லிமிடெட் (முன்னாள் எஸ்ஸெல் புரொபாக்லிமிடெட்)உடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை: கோல்கேட் பாமோலிவ் நிறுவனத்தின் டூத்பே ஸ்ட் டியூப்களை 100% மறு சுழற்சி டியூப்களாக மாற்றுவதற்கான தொடக்கமாகும் இது.
டியூப் பேக்கேஜிங் துறையில் சந்தையில் முதன்மை வகிக்கும் EPL நிறுவனம், நீடித்த நிலைப்புத் தன்மையில், வாடிக்கையாளர்களின் பெருகி வரும் தே வைகளை நிறைவேற்றுவதற்கு, உலகத் தரம் வாய்ந்த டியூப் பேக்கேஜிங் புதுமைப் படைப்பை கொண்டு வருவதற்கு உறுதி பூண்டிருக்கிறது.
EPL நிறுவனம், உயர் ந்த செயல்பாட்டுத் தன்மையை கருத்தில் கொண்டும் மற்றும் முக் கிய உற்பத்திப் பொருள் பண்புகள் மற்றும் செயல் திறன்களை விட் டுக் கொடுக்காமலும், கோல்கேட்- பாமோலிவ் நிறுவனத்திற்காக முதல் வகையிலான மறு சுழற்சி செய்யத்தக்க பிளாட் டினா டியூப்களை உருவாக் கியுள்ளது.
இத்தகைய முயற்சியை வாய் மற்றும் பல் பராமரிப்பு பொருட்கள் தயாரிப்பு பிராண்டான கோல் கேட்- பாமோலிவ் உடன் பங்கு வகிப்பதற்கு EPL என்றும் நன்றியுடையதாக இருக்கும்.
பிற பிராண்டு கள் பின் தொடர்வதற்கு பட்டியலில் தயாராக உள்ள நிலையில், கோல் கேட் ஆக்டிவ் சால்ட் மற்றும் கோல்கேட் வேத்ஷக்தியை பேக் செய்வதற்கு EPL-ன் அசோசியேஷன் ஆஃப் பிளாஸ்டிக் ரீசைக்லர்ஸ், யுஎஸ்ஏ (APR)-ஆல் ஏற் பளிக்கப்பட்ட 100% மறு சுழற்சி செய்யத்தக்க மற்றும் முற்றிலும் மறு சுழற்சி செய்யத்தக்க பிளாட்டினா டியூப்கள் வழியாக இந்த புதுமைப் படைப்பு இயல் விக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், EPL லிமிடெட்-ன், AMESA தலைவர், தீபக்கஞ்ஜு பேசுகையில், நீடித்த நிலைப் புத்தன்மை என்பது பேக் கேஜிங் புதுமைப் படைப்பில் சாதனை ஆகும்.
நீடித்து நிலைக்கத் தக்க பேக் கேஜிங்கில் EPL உலகளவில் முன்னணி வகிக்கிறது. பிராண்ட் தேவைகளுக்கேற்ப நம் சுற்றுச் சூழலில் எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது என்பதே எங்கள் தொலை நோக்கு ஆகும்.
புதுமையான நிலைக்கத்தக்க டியூப் பேக்கேஜிங் தீர்வுகளை வழங்குவதற்கு அனைத்து பிராண்ட்களுடன் கூட்டு வகிப்பதற்கு நாங்கள் உறுதி கொண்டிருக்கிறோம்,” என்றார்.



