fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (செப்.1) மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு, சுயதொழில் மற்றும் திறன்மேம்பாடு ஆலோசனை மையத்தை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு மாற் றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், திறன்கள் அடிப்படையில் வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் தனி யார் துறைகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வி ஆர் யுவர் வாய்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கென்று கடந்த வாரம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு 29 பேருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வி ஆர் யுவர் வாய்ஸ் என்ற தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு, சுய தொழில் மற்றும் திறன் மேம்பாடு ஆ லோசனை மையம் நேற் று (செப்.1) துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை வேலை வாய்ப்பு பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் தங் களது விவரங்களை இந்த ஆலோசனை மையத்தில் பதிவு செய்து கொண்டு தனியார் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பெற்று பயனடையலாம்.

இந்த மையம் குறித்த தகவல் தெரிந்து கொள்வதற்கு 7557550999 என்றை எண்ணிற்கு தொ டர்பு கொள்ளலாம். இம்மையம் நிரந்தமாக செயல்படும்.

சுய தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் வங்கிகளில் கடன்கள் பெறு வதற்கான வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதன் மூலம், மாற்றுத் திறனாளிகளும், சமூகத்தில் உள்ள மற்றவர்களுக்கு இணையாக பொருளாதார முன்னேற்றம் பெற்று வாழ்க்கையில் நல்ல நிலை யினை அடையலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எஸ்.செல்வ நாகரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் ப்பி.எஸ்.லீலா அலெ க்ஸ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img