Homeபிற செய்திகள்போதைப்பொருளால் நேரிடும் தீமைகளை விளக்கி கோவையில் மகளிர் இரு சக்கர வாகனப் பேரணி- புதிய ஆசியச்...

போதைப்பொருளால் நேரிடும் தீமைகளை விளக்கி கோவையில் மகளிர் இரு சக்கர வாகனப் பேரணி- புதிய ஆசியச் சாதனைக்காக சான்றிதழ்

கோவை மாநகர் காவல் துறை, இந்துஸ்தான் கல்வி நிறுவனங்கள், ஸ்பார்கிளிங் ஸ்டார்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தலைக்கவசம், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து இருசக்கர வாகனங்கள் இயக்குவது மற்றும் போதைப்பொருளால் நேரிடும் தீமைகள் ஆகியவை குறித்த விழிப்புணர்வை பரப்புவது தொடர்பாக புதிய சாதனை படைக்கும் நோக்கில் “மகளிர் மட்டுமே பங்கேற்ற பெரும் எண்ணிக்கையிலான இரு சக்கர வாகனப் பேரணி” கடந்த 19-ம் தேதி கோவை யில் நடந்தது.

கோவை மாநகர் இந்துஸ்தான் கல்லூரியில் துவங்கி கொடிசியா மைதானத்தில் நிறைவுற்றது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள், மகளிர் காவலர்கள் என மொத்தம் 1128 பேர் கலந்து கொண்ட வரலாற்றுச் சாதனை படைத்த மகளிர் வாகனப் பேரணியை, மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

பாலாஜி நியூரோ சைக்கியாட்ரிக் மையம்

பாலாஜி நியூரோ சைக்கியாட்ரிக் மையத்தின் மருத்துவர் மோனி, ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தீர்ப்பாளர் கவிதா ஜெயின் ஆகியோர் மாநகர காவல் துறையின் பணியையும், முன்மாதிரியான இம்முயற்சியையும் பாராட்டினர்.

வாகனப்பேரணி ஆசியச் சாதனை படைத் திட்ட விபரம் குறித்து அறிவிப்பு செய்து அதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பாக கவிதா ஜெயின், காவல் ஆணையரிடம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img