கோவை மாவட்ட மைய நூலகத்தில் 55-வது தேசிய நூலக வார விழா கடந்த 19-ம் தேதி நடந்தது.
மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன் வரவேற்றார்.
ரோட்டரி இ கிளப்
ரோட்டரி இ கிளப் சார்பில் தத்தமங்கலம் கமர்சியல் மானேஜர் வித்யா, மகிழ்வி அறக்கட்டளை நிறுவனத்திற்கு பள்ளி மற்றும் நூலகத்தில் பயிலும் மாற்றுத்திறனாளிக்கு பயனளிக்கக்கூடிய ரூ.4 ஆயிரம் மதிப்புள்ள சி-பென் டிவைஸ் கருவியை நன்கொடையாக வழங்கினார். இக்கருவி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பிறர் உதவியின்றி படிக்க உதவும்.
மாற்றுத்திறன் மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகளை, மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் நுட்ப சேவை மற்றும் உபகரணங்கள் பற்றிய ஆலோசகர் சங்கர் சுப்பையா துவக்கி வைத்தார்.
மகிழ்வி அறக்கட்டளை நிறுவனர் ஆதர்ஷ் ராம், மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் கே.கருணைவேந்தன் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டியில் வென்றவர்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கோ.வசந்தகுமார் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 3-ம் நிலை நூலகர் கே.பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.



