fbpx
Homeபிற செய்திகள்புதிய ஹோண்டா அமேஸ் கார் ஹோண்டா கார்ஸ் இந்தியா அறிமுகம்

புதிய ஹோண்டா அமேஸ் கார் ஹோண்டா கார்ஸ் இந்தியா அறிமுகம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட், (HCIL), இன்று மேம்படுத்தப்பட்ட தோற்றம், பிரீமியம் வெளிப்புற ஸ்டைலிங் மற்றும் பட்டுப்போன்ற உட்புறத்துடன், புதிய அமேஸை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரீமியம் ஃபேமிலி செடன் தற்போது மேனுவல் மற்றும் சிவிடி டிரானஸ்மிஷனுடன் பெட் ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு இன்ஜின்களிலும் கிடைக்கிறது. இது ஒரு மிகவும் புதிய மெட்டியோராய்டு கிரே மெட்டாலிக் வண் ணம் வகைகளில் கிடைக்கிறது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட்டின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான காகூ நகானிஷி சொன்னதாவது, “இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான மாடலும், நாட்டில் 4.5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களால் நன்கு ஏற்கப்பட்ட புதிய அமேஸை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது, விழாக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக புதிய அமேஸை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

புதிய அமேஸின் வெளிப்புற மாற்றங்கள் உறுதியான மற்றும் வசதியான தோற்றத்தை வழங்குகிற நுட்பமான குரோம் மாடலிங் லைனுடன் ஸ்லீக் சாலிட் விங் ஃபேஸ் பிரண்ட் கிரில், ஒருங்கிணைக்கப்பட்ட சிக்னேச்சர் எல்ஈடி டிஆர்எல்களுடன் கூடிய நவீனமான மற்றும் ஸ்டைலான அட்வான்ஸ்டு எல்ஈடி புரொஜெக்டர் ஹெட் லாம்புகள், ஸ்லீக் குரோம் கார்னிஷ் உடன் கூடிய புதிய மேம்படுத்தப்பட்ட ஃபிரன்ட் ஃபாக் லேம்புகள், மற்றும் விரிவான தோற்றத்திற்காக ஒரு மறுவடிவமைக்கப் பட்ட ஃபிரன்ட் பம்பர் கிரில் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. காரின் ஃபிரன்ட் ஃபாக் லேம்புகளுடன் புதியதாக வடிவமைக்கப்பட்ட ஹெட்லேம்புகள் இரவில் ஒளிரும்.

படிக்க வேண்டும்

spot_img