தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும் செயல்படுத்தியும் வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவ சேவையை அனைத்து பகுதிகளிலும் சென்றடையும் வகையில், மாநிலத்தில் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதார சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தினை செயல்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் “மக்களை தேடி மருத்துவம்” என்ற திட்டத்தினை 05.08.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப் படுவோர் உள்ளிட்ட நோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தேவையான மருந்து மாத்திரைகள், சிகிச்சைகள் வழங்க இந்தியாவிலேயே முதன் முறையாக “மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்” துவங்கப்பட்டுள்ளது.
தொடர்நோயால் பாதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருபவர்கள், தொடர் மருந்து மாத்திரைகள் எடுத்து வருபவர்கள், மருத்துவமனைக்கு சென்று வர இயலாதவர்களின் நிலையினை கருத்தில் கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்திட்ட பணியில் தன்னார்வலர் கள், ஆஷா பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோர் ஈடுபட உள்ளார்கள். முதல்வர் உத்தரவின்படி,நமது மாவட்டத்தில் கேத்தி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கேத்தொரை துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் 06.08.2021 அன்று, வனத்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தில் 44 பெண் சுகாதார தன்னார்வலர்கள், குன்னூர் வட்டாரத்தில் உள்ள 45 வயதிற்கு மேற்பட்ட உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், காசநோய், சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரண்டு மாதத்திற்கான மருத்துவ பெட்டகத்தை அவர்களின் வீடுக ளுக்குச் சென்று வழங்கப்படும். இத்திட்டம் கிராமப்புறம் மற்றும் மலைவாழ் மக்களுக்கு பெரிதும் பயன் அளிக்கும்.
குன்னூர் வட்டாரத்தில் மொத்தமாக உள்ள 3617 நோயாளிகளுக்கு இரண்டு மாதத்திற்கான மருத்துவ பெட்டகம், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலமாக அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும்.
இதனுடன் 80 நபர்களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சை சேவையும், வயது முதிர்ந்தவர்கள், மருத்துவமனைக்குச் செல்ல முடியாதவர்கள் என 206 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சை றிமீக்ஷீவீtஷீஸீமீணீறீ ஞிவீணீறீஹ்sவீs சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மாவட்டம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு நமது மாவட்டத்தில் உள்ள 23046 உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவ பெட்டகம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தற்போது வரை 2362 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தங்களது இரத்த அழுத்த அளவையும், இரத்தத்தில் சர்க்கரை அளவையும் பரிசோதித்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பரிசோதிக்கும் பொழுது உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் கண்டறியப்பட்டால் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்.
மாத்திரை வாங்க முடியாமல் சிரமப்பட்டேன்
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்த உமா கூறியதாவது: என் கணவர் பெயர் கிருஷ்ணன். நான் அருவங்காட்டில் வசித்து வருகிறேன். எனக்கு 64 வயதாகிறது. நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்.
எனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது. எனவே தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகளை வாங்கி வருவேன்.
சில நேரங்களில் மாத்திரை வாங்க முடியாத காரணத்தினால் தொடர்ந்து சாப்பிட முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன்.
தற்போது முதல்வர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் எனக்கு வீட்டிற்கே வந்து இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கி னார்கள்.
எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி இதுபோன்றதொரு சீரிய திட்டத்தினை செயல்படுத்திய முதல்வருக்கு, நானும் எனது குடும்பத்தினரும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொதுமக்களின் நலன்கருதி தொடர்ந்து பல திட்டங்களை வெகு சிறப்பாக செய்து வருகிறது.
குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் நோயாளிகள் வீடுகளுக்கே சென்று இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி வருகிறது என்றார்.
பதவியேற்ற 100 நாட்களில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியினை நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தெரிவித்து கொண்டனர்.
5 ஆண்டுகளாக சிகிச்சை
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பயனடைந்த நெல்சன் கூறியதாவது:
வெலிங்டன் கண்டோன்மெண்ட் பகுதிக்கு உட்பட்ட லோயர் குரூஸ்பெட் பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 66 வயதாகிறது.
எனக்கு 5 வருட காலமாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். மாதத்திற்கு ஒருமுறை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தேவையான மருந்து மாத்திரைகளை வாங்கி வருவேன்.
சில நேரங்களில் சரியாக சென்று வாங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். தற்போது மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் எனது வீட்டிற்கே வந்து இரண்டு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கினார்கள்.
எனக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.எங்களை போன்றவர்களுக்கு இதுபோன்ற திட்டத்தினை துவக்கி வைத்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



