fbpx
Homeதலையங்கம்செய்தியாளருக்கு 11 ஆண்டுகள் சிறை!

செய்தியாளருக்கு 11 ஆண்டுகள் சிறை!

பிரான்டியர் மியான்மர் என்ற இணைய தள இதழின் நிர்வாக ஆசிரியரான டேனி, ராணுவ ஆட்சியாளர்களால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தவறான தகவல்களை பரப்பி வன்முறையை தூண்டியது, சட்ட விரோத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டது, நுழைவு இசைவு மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடர்பான விசாரணையின் முடிவில் டேனிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் கலைத்தது.

அரசின் தலைமை ஆலோசகரான ஆங் சான் சூகி, அதிபர் வின்மின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களை பாதுகாப்பு படையினர் கடுமையான முறையில் அடக்கினர். இதில் 1000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மியான்மர் ஊடகங்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதில் பல செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில் டேனி பென்ஸ்டருக்கு மியான்மர் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

அமெரிக்காவின் கடும் கண்டனத்தை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நடுநிலைப் பத்திரிக்கையாளர்களை கைது செய்வதும், தண்டனை வழங்குவதும் தவறான முன்னுதாரணமாகும்.

படிக்க வேண்டும்

spot_img