fbpx
Homeபிற செய்திகள்அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராஜுக்கு 'பாரத் ஜோதி' விருது

அரசு ஊழியர் சங்க தலைவர் ஜெயராஜுக்கு ‘பாரத் ஜோதி’ விருது

அரசு ஊழியர் சங்க தலைவர் தலித் ஜெயரா ஜுக்கு பாரத் ஜோதி விருது டெல்லியில் வழங்கப்பட்டது.

டெல்லி இந்தியன் இண்டர்நேஷனல் பிரன்ட்ஷிப் சொசைட்டி சார்பில் 28 ஆண்டுகள் சமூக பணிகள் ஆற்றிய சிறந்த சமூக ஆர்வலர்களை தேர்வு செய்து பாரத் ஜோதி விருதை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதை கோவையை சேர்ந்த டாக்டர் அம்பேத்கார் அரசு மற்றும் பொதுத் துறை எஸ்.சி. எஸ்.டி. ஊழியர்கள் நலச் சங்க தலைவர் தலித் ஜெயராஜுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

அதற்கான விருதை அவர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ராஜ்யசபா எம்.பி. டாக் டர் சசிகலா புஷ்பா ராமசாமியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தலித் ஜெயராஜுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img