fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள்

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் அனும திக்கப்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையின் குழந்தை நலத்துறை மற்றும் பி.எஸ்.ஜி நர்சிங் கல்லூரி இணைந்து பொது நல விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

பேராசிரியர் ஜெய வர்த்தனா மேற்பார்வையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி மருத் துவமனையில் பல்வேறு பிரச்சினைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, குழந்தைகளுக்கான தடுப்பூசி மற்றும் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு முறைகள் குறித்து பேராசிரியர்கள் நீலகண்டன், ஜோதிலட்சுமி ஆகியோர் உரையாடினர்.

இந்த நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை யின் மருத்துவரும் பேராசி ரியருமான சுகந்தி கலந்து கொண்டு கூறியதாவது: குழந்தைகள் சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பதை தடுக்க வேண்டும்.

நூடுல்ஸ், பர்கர், பீசா போன்ற பாஸ்ட் புட்களை தவிர்த்து வீட்டிலேயே கடலை உருண்டை, எள்ளுருண்டை ஆகியவற்றை செய்து கொடுக்க வேண்டும்.
குழந்தைகள் சாப்பிடுவதற்கும், அழுவதை தடுப்பதற்காகவும் மொபைல் போன்களை அவர்களிடம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

2 வயதுக்கு குறைவான குழந்தைகளிடம் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களை அறவே காட்டக் கூடாது. 2 வயதுக்கு மேற்பட்டோருக்கு அதிக பட்சம் 1 மணி நேரம், 5 வயதுக்குட்பட்டோருக்கு அதிகபட்சம் 3 மணி நேரம் மட்டுமே தரமான பதிவுகளை காண்பிக்கலாம்.

ஜனவரியில் இருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி கிடைக்கும். அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img